Home நாடு 14-வது நாடாளுமன்றத்தின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியது!

14-வது நாடாளுமன்றத்தின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியது!

1323
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 14-வது நாடாளுமன்றத்திற்கான இரண்டாம் கட்ட முதல் அமர்வு இன்று காலை 10.00 மணியளவில் தொடங்கியது. இவ்வாண்டு ஜனவரி 31-ஆம் தேதி மாமன்னராக பதவியேற்ற சுல்தான் அப்துல்லாவின் முதல் நாடாளுமன்ற அமர்வாக இது அமைந்துள்ளது.   

1963 மலேசியா உடன்படிக்கை (எம்ஏ63) குறித்த கலந்துரையாடல் இந்த நாடாளுமன்ற அமர்வில் முக்கியமானதாகக் கலந்தாலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. சபா மற்றும் சரவாக்கின் உரிமைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான கூட்டரசு அரசியலமைப்பின் 1 (2) சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்த கலந்துரையாடலாக இது அமையும்.

மலேசிய நாடாளுமன்றத்தில் வரலாற்றை உருவாக்கும் விதமாக, முதல் முறையாக பூர்வகுடி மக்களைப் பிரதிநிதித்து, கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினரான ரம்லி முகமட் நோர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொள்ள இருக்கிறார்.   

#TamilSchoolmychoice

இந்த நாடாளுமன்ற அமர்வு, 20 நாட்களுக்கு, ஏப்ரல் 11-ஆம் தேதி வரையிலும் நடைபெறும்.