Home உலகம் எத்தியோப்பிய விமான விபத்து: போயிங் நிறுவனம் விமர்சனத்திற்குள்ளாகிறது!

எத்தியோப்பிய விமான விபத்து: போயிங் நிறுவனம் விமர்சனத்திற்குள்ளாகிறது!

1573
0
SHARE
Ad

அடிஸ் அபாபா: எத்தியோப்பியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்தில் அதில் பயணம் செய்த 157 பேரும் இறந்ததை அடுத்து, அந்த விமானத்தை தயாரித்த போயிங் நிறுவனத்தின் மீது அனைவரின் கவனமும் சென்றுள்ளது.

இதே இரக விமானம் ஒன்று இந்தோனிசியா அருகே கடலில் விழுந்து நொறுங்கியதில், 190 பேர் மரணமுற்றனர். அதுவும், இதே இரக விமானம் எனக் கூறப்படுகிறது. அச்சம்பவம் நடந்த ஐந்து மாதங்களுக்குள் மீண்டும் அதே மாதிரி விமானத்தைத் உள்ளடக்கிய விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆயினும், இந்த விபத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. வான்பரப்பில் ஒரு சில சிரமங்களை சந்தித்த விமானியை, அடிஸ் அபாபா விமான நிலையத்துக்கே திரும்பும்படி அவரிடம் கூறப்பட்ட போது, இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தை அடுத்து, சீன அரசு 737 மேக்ஸ்-8 இரக விமானத்தின் பயணங்களை நிறுத்தியுள்ளது. மேலும், மலேசியாவில் இந்த இரக விமானங்கள் பயன்பாட்டில் இல்லையென்றாலும், இது குறித்து ஆராயப்படும் என மலேசிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

#TamilSchoolmychoice

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி 8.44-க்கு மணிக்கு, புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 இரக விமானம், புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், எட்டு விமானப் பயணிகள் உள்பட விமானத்தில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர்.