Home நாடு 2019-ஆம் ஆண்டுக்கான அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் மலேசியா இரண்டாவது நிலை!

2019-ஆம் ஆண்டுக்கான அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் மலேசியா இரண்டாவது நிலை!

1497
0
SHARE
Ad

பர்மிங்காம்: தேசிய பூப்பந்து இரட்டையர் ஜோடிகளான ஹெரன் சியா டெங் பொங் மற்றும் சொ வூய் யிக் இணை நேற்று ஞாயிற்றுக்கிழமை, பர்மிங்காம் நகரில் நடைபெற்ற 2019-ஆம் ஆண்டுக்கான அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இரண்டாவது நிலையைப் பெற்றனர்.

முதல் சுற்றில் மலேசிய இணை 21-11 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. ஆயினும், இரண்டாவது சுற்றில் இந்தோனிசியாவின் முகமட் ஹசான் மற்றும் ஹெண்ட்ரா இணை 21-14 என்ற புள்ளியில் மலேசிய அணியை வீழ்த்தியது.

மூன்றாவது சுற்றில், இந்தோனிசிய அணி 21-12 என்ற புள்ளியில் ஆட்டத்தை அவர்கள் பக்கம் சாதகப்படுத்தியது. அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டிகளில் , கடைசியாக கடந்த 2007-ஆம் ஆண்டு கூ கியேன் கியாட் மற்றும் டான் பூன் ஹியோங் இணை வெற்றியாளர் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.