Home நாடு ரந்தாவ்: நம்பிக்கைக் கூட்டணி சார்பில் ஶ்ரீராம் களம் இறங்குகிறார்!

ரந்தாவ்: நம்பிக்கைக் கூட்டணி சார்பில் ஶ்ரீராம் களம் இறங்குகிறார்!

1479
0
SHARE
Ad

சிரம்பான்: வருகிற ஏப்ரல் 13-ஆம் நடைபெற இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து டாக்டர் எஸ்.ஶ்ரீராம் சின்னசாமி களம் இறக்க உள்ளார். இந்த அறிவிப்பை இன்று திங்கட்கிழமை பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே, நியாயமான சூழ்நிலையில் வேட்பாளரை தாங்கள் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், இந்தியர்களின் வாக்கு எண்ணிக்கையை கருத்தில் கொண்டதாலும், டாக்டர் ஶ்ரீராமை வேட்பாளராக கட்சித் தேர்ந்தெடுத்ததாக அன்வார் குறிப்பிட்டார். தற்போதைய அரசியல் சூழலில், எதிர்க்கட்சியினர் இன ரீதியாக தங்களின் அரசியல் நிலையைப் பிரதிபலித்து வருவது, நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளுக்கிடையில் எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என அவர் தெரிவித்தார்.

வேட்பு மனுத் தாக்கல் வருகிற மார்ச் 30-ஆம் தேதி நடத்தப்படும் வேளையில், ஏப்ரல் 9-ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.