Home வணிகம்/தொழில் நுட்பம் ‘ஸ்மார்ட் கம்போஸ்’ முறை அண்ட்ராய்டு கைபேசிகளில் அறிமுகம்!

‘ஸ்மார்ட் கம்போஸ்’ முறை அண்ட்ராய்டு கைபேசிகளில் அறிமுகம்!

1711
0
SHARE
Ad

கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பானஜிமெயில்மின்னஞ்சல், கடந்த 2018-ஆம் ஆண்டில் ‘ஸ்மார்ட் கம்போஸ்(Smart Compose) எழுதும் முறையை கணினிகளில் பயன்படுத்த அறிமுகம் செய்தது. இந்த செயல்முறையை கூகுள் நிறுவனம், கைபேசிகளில் வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் கூகுள் பிக்சல் 3 கைபேசிகளில் இந்த ஸ்மார்ட் கம்போஸ் அமைப்பு பொருத்தப்பட்டது.

தற்போது, இம்முறை அண்ட்ராய்டு செயல்முறைக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய அமைப்பு, நாம் என்ன எழுத வருகிறோம் என்பதை புரிந்து கொண்டு, உடனே அந்தச் சொல்லினை அடுத்தச் சொல்லாக முன்வைக்கும். நாம் அதிகமாக பயன்படுத்தும் வாக்கியம் அல்லது பதில்களையும் இது உருவாக்கும். இவ்வாறான் செயல்முறை நேரத்தை சேமிக்கும் அதே சமயத்தில், எழுத்துப் பிழைகள் இன்றி எழுதவும் உதவுகிறது. இந்த முறையை விரும்பாதவர்களுக்கு, இந்த வசதியை நீக்கிக் கொள்ளும் வழியையும் கூகுள் கொடுத்துள்ளது