Home நாடு “அம்னோ-பாஸ் நடவடிக்கைகள் பல்லின மக்கள் வாழும் நாட்டிற்கு உகந்ததல்ல!”- பிரதமர்

“அம்னோ-பாஸ் நடவடிக்கைகள் பல்லின மக்கள் வாழும் நாட்டிற்கு உகந்ததல்ல!”- பிரதமர்

823
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, அவர்கள் மலாய்க்காரர்களையும், பிற இனங்களையும் பிரிக்க முற்படுவதாகத் தெரிகிறது என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

இம்மாதிரியான சூழல் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல என அவர் கூறினார்.

நாங்களும் மலாய்க்காரர்களின் நலன்களை கவனித்து வருகிறோம். ஆனால், அதனை நாங்கள் உரக்க எழுப்பவில்லைஎன்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சமமாக உரிமைகளை அளிப்பது மட்டுமல்ல, நியாயமானதையும் அளிக்க நாம் செயல்பட வேண்டும். எல்லா நிலைகளிலும், மலேசியர்களுக்கு நியாயமான, சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

ஆகவே, நாங்கள் மலாய்க்காரர்களின் நலன்களை கவனித்துக் கொள்வோம். அதே நேரத்தில், இந்த நாட்டில் செல்வத்தை நியாயமாக பங்கிட்டு பிற இனங்களும் அனுபவிக்கும் செயல்முறை திட்டங்களை செயல்படுத்துவோம்” என அவர் குறிப்பிட்டார்.