Home கலை உலகம் தேவி 2 படம் ஏப்ரல் 12-இல் வெளியீடு!

தேவி 2 படம் ஏப்ரல் 12-இல் வெளியீடு!

2392
0
SHARE
Ad

சென்னை: கடந்த 2016-ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா மற்றும் தமன்னா நடித்து வெளிவந்த படம் தேவி. இத்திரைப்படத்தினை இயக்குனர் விஜய் இயக்கியிருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி வெளிவரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நகைச்சுவை கலந்து, தனது ஆசைகளைப் பூர்த்தி செய்ய தமன்னாவின் உடலை பாத்திரமாகப் பயன்படுத்தும் ஆன்மாவின் கதையாக இது அமைந்தது. மீண்டும் இரண்டாம் பாகத்தில் பிரபுதேவாவும், தமன்னாவும் இணைய உள்ளனர்.

#TamilSchoolmychoice

மேலும், இத்திரைப்படத்தில் முக்கியப் பாத்திரத்தில் யோகி பாபு, கோவை சரளா, நந்திதா, நாசர், ஆகியோர் நடிக்க உள்ளனர்.