இலவசம் இல்லாத தேர்தல் அறிக்கையை வெளியிட மக்கள் நீதி மய்யம் முடிவு!

    1679
    0
    SHARE
    Ad

    சென்னை: மக்கள் நீதி மய்யக் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாராகி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முக்கியமான அம்சமாக, தங்களது தேர்தல் அறிக்கையில் எந்த ஓர் இலவச பொருட்களும் இணைக்கப் போவதில்லை எனும் முடிவினை கட்சி முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விவசாய நிலங்களை, விவசாய பயன்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்தபடும், போன்ற அறிவிப்புகள்இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது. இவை அனைத்தும் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திட்டமிட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுநாள் வரையிலும் தேர்தலின் போது வழக்கமாக மக்களுக்கு இலவசப் பொருட்களை தரும் பழக்கத்தை, தாங்கள் கையில் எடுக்கப்போவதில்லை என கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது. மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது.