Home வணிகம்/தொழில் நுட்பம் பயனரின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் தவறான வாட்ஸ் அப் செயலிகளுக்குத் தடை!

பயனரின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் தவறான வாட்ஸ் அப் செயலிகளுக்குத் தடை!

940
0
SHARE
Ad

கலிபோர்னியா: பிளே ஸ்டோரில் சிலர் வாட்ஸ் அப் செயலியைப் போன்றே இருக்கும் ஒரு சில செயலிகளைப் பார்த்திருக்கலாம். சிலர், அவற்றை வாட்ஸ் அப் என எண்ணி பதிவிறக்கம் செய்திருக்கலாம். தற்போது, வாட்ஸ் அப் நிறுவனம் தனது தயாரிப்பை போன்று இருக்கும் சில மூன்றாம் தரப்பு செயலிகளைத் தடை செய்துள்ளது. வாட்ஸ் அப் பிளஸ் அல்லது ஜிபி வாட்ஸ் அப் போன்ற மூன்றாம் நபர் செயலிகளுக்கு தற்காலிக தடையை வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது

மேலும், பயனர் யாராவது தவறான வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தி வந்தால், பாதிக்கப்படுவதற்கு முன்னர் அதிகாரப்பூர்வமான வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மாதிரியான, வாட்ஸ் அப் செயலிகள் பயனர்களின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த தடை நிரந்திரமானது இல்லை என்றும், ஆயினும் இம்மாதிரியான செயலிகளை விட சரியான வாட்ஸ் அப்பை பயன்படுத்துமாறு தனது வாடிக்கையாளர்களுக்கு ஓர் அறிவிப்பை அந்நிறுவனம் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.