கோலாலம்பூர்: ஜாரிங்கான் மலாயு மலேசிய (ஜெஎம்எம்) அமைப்பின் தலைவர் அஸ்வாண்டின் ஹம்சா மீது அவதூறு வழக்கொன்றை பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தொடுத்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பேரணி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அஸ்வாண்டின், தம்மை இழிவுப்படுத்திப் பேசியதாக அவர் குறிப்பிட்டார்.
பேரணியின் போது உரையாற்றிய அஸ்வாண்டின், தம்மை வேண்டுமென்றே அவதூறு சொற்களைப் பயன்படுத்தி, அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் அளவிற்குப் பேசியதாக குறிப்பிட்டார்.
சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் கலவரத்தை ஏற்படுத்தியவர்களை கைது செய்யாவிட்டால் காவல் நிலையத்தைத் தாக்க தயாராக உள்ளதாக அஸ்வாண்டின் காவல் துறையை எச்சரித்தற்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
அந்த பேரணியின் போது பேசிய அஸ்வாண்டின், அமைச்சர் வேதமூர்த்தியை தகாத வார்த்தைகளாலும், சான்றுகளற்ற அவதூறுகளை அவர் மீது வைத்தது குறிப்பிடத்தக்கது.