Home நாடு “பின்தங்கியவர்களுக்கு உதவுங்கள்” சிறந்த மாணவி திவ்யா வேதமூர்த்தியிடம் வேண்டுகோள்

“பின்தங்கியவர்களுக்கு உதவுங்கள்” சிறந்த மாணவி திவ்யா வேதமூர்த்தியிடம் வேண்டுகோள்

2708
0
SHARE
Ad

புத்ராஜெயா – 2018 எஸ்டிபிஎம் தேர்வில் தேசிய அளவில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற மாணவி திவ்யா ஜனனி மாரியப்பனை பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தனது அலுவலகத்திற்கு அழைத்து சிறப்பு செய்தார்.

அப்போது பேசிய திவ்யா அமைச்சரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் பின் தங்கிய நிலையில் உள்ள தான் பிறந்த தோட்ட மேம்பாட்டிற்கு உதவி கேட்டு, அமைச்சரையும் உடன் இருந்தவர்களையும் நெகிழ்ச்சிக்கு ஆளாக்கினார்.

தன் பெற்றோர் சாந்தி – மாரியப்பன் இணையர், பால் மரத் தோட்டத் தொழிலாளர்களாக இருந்தாலும் முழு அக்கறையுடன் கல்வி பயின்று, பெற்றோருக்கு மட்டும் அல்லாமல் டத்தோ முகமட் பாதுகா ராஜா(1) இடைநிலைப் பள்ளிக்கும் கிளந்தான் மாநிலத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள இந்த சாதனை மாணவிக்கு தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தன் அலுவலகத்தில் சிறப்பு செய்தார்.

#TamilSchoolmychoice

தன் பெற்றோர், வட்டார அரசு சாரா அமைப்பினர் ஆகியோருடன் அமைச்சரை சந்தித்தபோது, ஏதும் உதவி வேண்டுமா என்று அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வினவியபோது, “எனக்கென ஒன்றும் வேண்டாம்; ஆனால், மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள தான் பிறந்த கெரில்லா தோட்ட மேம்பாட்டிற்கு எதும் செய்தால் நல்லது” என்று திவ்யா குறிப்பிட்டார்.

அமைச்சரின் சிறப்பு அதிகாரி சே.இராஜமோகன், மித்ரா இயக்குநர் ச.லெட்சுமணன், மித்ரா கல்விப் பிரிவு இயக்குநர் ஜெயக்குமார் உள்ளிடோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அணிச்சல் (கேக்) வெட்டி திவ்யா ஜனனிக்கு சிறப்பு செய்யப் பட்டது.