இதுகுறித்த செய்திகளை செல்லியல் ஊடகமும் வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்விழா குறித்த அறிக்கைகள் திருத்தம் செய்யப்பட்டு புதிய அறிக்கைகள் தமிழில் வெளியிடப்பட்டிருக்கின்றன.


அதுமட்டுமல்லாமல், தமிழ் விழாவின் உள்ளடக்கம் குறித்த கண்டனங்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, தமிழ் விழா நிகழ்ச்சியின் உள்ளடக்கங்களிலும் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தின் தமிழ் விழா அறிக்கைகள் தமிழில் வெளிவந்திருப்பதைத் தொடர்ந்து அம்மன்றத்தின் நடவடிக்கைக்கு பரவலாக வரவேற்பும் ஆதரவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.