Home நாடு பாசிர் கூடாங் தூய்மைக் கேடு : 111 பள்ளிகள் மூடப்பட்டன

பாசிர் கூடாங் தூய்மைக் கேடு : 111 பள்ளிகள் மூடப்பட்டன

753
0
SHARE
Ad

பாசிர் கூடாங் – இந்த வட்டாரத்திலுள்ள சுங்கை கிம் கிம் ஆற்றில் கொட்டப்பட்ட சட்டவிரோதக் கழிவுகளால் ஏற்பட்டுள்ள நச்சுக் காற்று மற்றும் தூய்மைக் கேட்டினால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்று வட்டாரத்திலுள்ள 111 பள்ளிகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு காலவரையின்றி நீடிக்கும்.

நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்துள்ளதால், மாணவர்கள், ஆசிரியர்களின் நலன்களைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் கல்வி அமைச்சு தனது குடும்பமாகக் கருதுவதாகவும் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் (படம்) தெரிவித்தார்.

இதற்கு முன் சுங்கை கிம் கிம் ஆற்றில் கொட்டப்பட்ட கழிவுகளினால் ஏற்பட்ட இராசயன தூய்மைக் கேட்டினால் 13 பள்ளிகள் மூடப்பட்டதோடு, 300 மக்களும் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் நச்சுக் கழிவுகளை ஆற்றில் கொட்டியதற்காக  கார்களுக்கான சக்கரங்களை மறுசுழற்சி முறையில் தயாரிக்கும் தொழிற்சாலையின் உரிமையாளர்  இன்று வியாழக்கிழமை சுற்றுச் சூழல் தர சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என ஆற்றல், தொழில்நுட்பம், அறிவியல், பருவநிலை மாற்ற அமைச்சரான அமைச்சர் இயோ பீ இன் தெரிவித்தார்.