Home நாடு குறை கூறுவதை விடுத்து, இந்தியர்கள் தகுதியுடையவர்களாக வளர்த்துக் கொள்ள வேண்டும்!- மசீச மகளிர் பகுதி

குறை கூறுவதை விடுத்து, இந்தியர்கள் தகுதியுடையவர்களாக வளர்த்துக் கொள்ள வேண்டும்!- மசீச மகளிர் பகுதி

1093
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தனியார் நிறுவனங்களில் இந்தியர் மற்றும் மலாய்க்காரர்களின் பணி அமர்வை, இன ரீதியில் கையாள வேண்டாம் என மசீச மகளிர் பிரிவுத் தலைவர் ஹெங் சாய் கி கூறினார். மேலும் கூறிய அவர், தனியார் துறைகள் இயற்கையாகவே இலாபநோக்கமுள்ளவை. அவர்களுக்கு திறமைமிக்க வேலையாட்கள்தான் தேவை. ஆகவே, பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தியின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அவர் குறிப்பிட்டார்.

தனியார் நிறுவனங்களின் பணியமர்த்தலில், இன மற்றும் மதத்திற்கு அப்பாற்பட்டு தேர்வுக் கூறுகள் இயற்றப்பட்டு பூர்த்தி செய்யப்படுகிறது என அவர் கூறினார். தகுதிமிக்க தனிநபருக்கு மட்டும் வேலை வழங்கப்படும் எனவும் அவர் தெளிவுப்படுத்தினார். இத்தகைய நடைமுறையானது, வெளிப்படையாகவும், நியாயமாகவும் செயல்படுத்தப்படுகிறது என்றார்.

இந்தச் சூழலில், தனியார் துறையில் வேலைக்கு அமர்த்தப்படும் இந்தியர்களின் விழுக்காடு குறைவாக உள்ளதை இன ரீதியில் பார்ப்பது சரியானதல்ல. ஒருவரின் தனிப்பட்ட திறன், விருப்பம், போட்டி தன்மைகள் அடிப்படையில் தேர்வு நடைப்பெறுகிறது” என அவர் குறிப்பிட்டார். 

#TamilSchoolmychoice

குறை கூறுவதை விடுத்து வேலை வாய்ப்புகளுக்கு தங்களை தகுதியுடையவர்களாக வளர்த்துக் கொள்ள, தனிப்பட்ட திறமைகளை சம்பந்தப்பட்டவர்கள் மேம்படுத்திக் கொள்வதற்கு அமைச்சர் வலியுறுத்த வேண்டும் என ஹெங் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தார்.

சிக்கலை தீர்க்கும் வழியைக் கண்டறிய வேண்டும். குறுகிய கண்ணோட்டத்தில் இருந்து பிரச்சினையைப் பார்க்காமல் அதனை சரிசெய்ய முற்படுங்கள்” என ஹெங் கூறினார். 

முன்னதாக, செந்த்-கிபிஎஸ் நிறுவனம் நடத்திய ஆய்வொன்றில், இந்தியர்கள் மற்றும் மலாய்க்காரர்களைக் காட்டிலும், சீனர்கள் அதிகமான அளவில் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர் என ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன் அடிப்படையில், நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் வேதமூர்த்தி கருத்துரைத்ததற்கு ஹெங் இவ்வாறு குறிப்பிட்டார்.