Home வணிகம்/தொழில் நுட்பம் முகநூல் பக்கத்தில் இருந்து விலகினார் டோனி பெர்னாண்டஸ்

முகநூல் பக்கத்தில் இருந்து விலகினார் டோனி பெர்னாண்டஸ்

1234
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வந்த ஏர் ஆசியா நிறுவனத் தலைவர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தனது முகநூல் பக்கத்தை மூடுவதாக அறிவித்தார். தனது டுவிட்டர் பக்கத்தையும் மூடுவதற்கு உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கும் டோனி பெர்னாண்டஸ் ‘சமூக ஊடகங்களில் வெறுப்பு கலாச்சாரம் பரப்பப்பட்டு வருவதையும்’ அண்மையில் நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் நேரலையாக முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பப்பட்டதையும் தனது விலகலுக்கான காரணங்களாகக் காட்டியிருக்கிறார்.

சமூக ஊடகங்களினால் விளையும் நன்மைகளை விட அதில் பரப்பப்படும் வெறுப்புக் கலாச்சாரத்தினால் விளையும் பகைமை அதிகம் எனக் குறை கூறியிருக்கிறார் அவர்.

டோனி பெர்னாண்டசின் முகநூல் பக்கத்தில் அவரை 670,000 பேர் பின்தொடர்கிறார்கள். டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு 1.29 மில்லியன் பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள்.

டுவிட்டரில் தொடர்ந்து தான் தீவிரமாக இயங்கிவர எண்ணம் கொண்டிருப்பதாகவும் டோனி பெர்னாண்டஸ் கூறியிருக்கிறார்.