சென்னை: இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவாகியுள்ளது.
இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ்சுக்கு புதுச்சேரியையும் சேர்த்து பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் கடந்த மார்ச் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.
வேட்பாளர்களை அறிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் தனது மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை வரும் 20-ஆம் தேதி திருவாரூரிலிருந்து தொடங்க உள்ளதாகவும் கூறியுள்ளார். அதன்படி, 20 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலும், இதர கட்சிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டன.
திமுகவை பிரதிநிதித்து வட சென்னையில் ஆற்காடு வீரசாமியின் மகன் டாக்டர் கலாநிதி வீராசாமி போட்டியிடுகிறார். தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் களம் இறங்குகிறார். இவர் முன்னாள் வணிகத்துறை அமைச்சரான வி. தங்கப்பாண்டியனின் மகளாவார். மத்திய சென்னையில் தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். இவர் முரசொலி மாறனின் இரண்டாம் மகன். முன்னாள் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் மத்திய அமைச்சராக இருந்தவர்.
வேலூரில் கதிர் ஆனந்த் போடியில் இறங்குகிறார். இவர், திமுகவின் பொருளாளராகவும், மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகனின் மகனாவார். கள்ளகுறிச்சியில் கவுதம சுகாமணி தேர்வாகி உள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனாவார். கனிமொழி தூத்துக்கொடியில் போட்டியிடுகிறார். நீலகிரியில் ஆ. ராசா போட்டியில் இறங்குகிறார். இவர் மக்களவைக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதனை அடுத்து உள்ள தொகுதிகளில் போட்டியிடுபவர்களின் பட்டியல் கீழ் இணைக்கப்பட்டுள்ளது:
1. ஸ்ரீபெரும்புதூர்– டி.ஆர்.பாலு
2. காஞ்சிபுரம்– செல்வம்
3. அரக்கோணம்– ஜெகத்ரட்சகன்
4. தருமபுரி– செந்தில் குமார்
5. திருவண்ணாமலை– சி.எஸ்.அண்ணாதுரை
6. சேலம்– எஸ்.ஆர்.பார்த்திபன்
7. பொள்ளாச்சி– சண்முக சுந்தரம்
8. திண்டுக்கல்– வேலுச்சாமி
9. கடலூர்– ரமேஷ்
10. மயிலாடுதுறை– இராமலிங்கம்
11. தஞ்சாவூர்– பழனி மாணிக்கம்
12. தென்காசி– தனுஷ் குமார்
13. திருநெல்வேலி– ஞான திரவியம்