Home நாடு அம்னோ வலுவின்றி இருந்தால், மசீச தேமுவை விட்டு வெளியேறி இருக்கும்!

அம்னோ வலுவின்றி இருந்தால், மசீச தேமுவை விட்டு வெளியேறி இருக்கும்!

686
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மசீச தேசிய முன்னணியில் நீடிப்பது குறித்த முடிவை தாம் ஆதரிப்பதாக பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அஜிஸ் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

கடந்த செமினி சட்டமன்ற இடைத் தேர்தலின் போது இனவாத கருத்துகளால் சர்ச்சைக்குள்ளான நஸ்ரி, நடந்து முடிந்த தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்தில், தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் பதவிலிருந்து விலக்கப்பட்டார். தேசிய முன்னணியின் பிற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் நஸ்ரி அந்த பதவியில் அமர்ந்தது சட்டத்திற்கு முறனானது என்ற அடிப்படையில் அவர் விலக்கப்பட்டார்.

இது குறித்து மேலும் பேசிய நஸ்ரி, மசீசவின் இந்த முடிவினால், அம்னோ இன்னும் வலுவான கட்சியாக இருப்பதை புலப்படுத்துவதாக இருக்கிறது என்றார். அம்னோ வலுவின்றி இருந்தால், அவர்கள் இந்தக் கூட்டணியில் இருக்கமாட்டார்கள் என அவர் சுட்டிக் காட்டினார். ஆயினும், அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்குடனான கூட்டணியில் தாங்கள் மும்முறமாக செயல்பட்டு வருவதாகவும், அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கு அதுவே சிறந்த வழி எனவும் அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பல்லின மக்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் வளர்ச்சி மிக்க மலேசியாவை உருவாக்குவதற்கு, தேசிய முன்னணி கூட்டணியில் இருந்து செயல்பட மசீச முடிவு எடுத்துள்ளதாக கட்சி உயர்மட்டம் அறிவித்திருந்தது.