Home நாடு ஜோகூர் சுல்தான்: அரச பிறந்தநாள் விருந்துபசரிப்புகள் இரத்து!

ஜோகூர் சுல்தான்: அரச பிறந்தநாள் விருந்துபசரிப்புகள் இரத்து!

787
0
SHARE
Ad
படம்: நன்றி ஸ்டார்

ஜோகூர் பாரு: ஜோகூர் சுல்தானின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அடுத்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரச விருந்துபசரிப்பை, சுல்தான் இப்ராகிம் இரத்து செய்துள்ளதாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

பாசிர் கூடாங் மக்கள் நச்சுக் காற்று மற்றும் ஆற்று நீர் மாசடைந்ததால், அவதியுற்று வரும் இந்த வேளையில் தாம் இம்மாதிரியான கொண்டாட்டங்களில் இருப்பது சரியானதாக இருக்காது என தனது முகநூலில் வெளியான அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அரசாங்க துறைகள் மற்றும் அமைப்புகள், கிம் கிம் ஆற்று துப்புரவு பணியில் கவனம் செலுத்துவதற்காக இந்த நிகழ்ச்சிகளை இரத்துசெய்ததாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பாதுகாப்புப் படைகள், மருத்துவ குழுக்கள் உட்பட பொது ஊழியர்களும் இந்த துப்புரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நான் அவர்களின் அர்ப்பணிப்புகளை மதிக்கின்றேன்  என அவர் பதிவிட்டிருந்தார்.

வருகிற மார்ச் 24-ஆம் தேதியும், 25-ஆம் தேதியும், ஜோகூர் சுல்தானின் பிறந்தநாளை முன்னிட்டு அரச விருந்துபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.