Home கலை உலகம் 3-வது படத்தை தயாரிக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்!

3-வது படத்தை தயாரிக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்!

1042
0
SHARE
Ad

சென்னை: பரியேறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற நல்ல கதை அம்சங்களை தயாரித்து வழங்கிய, இயக்குனர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் அடுத்த படம் உருவாகப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

எதார்த்தத்தை முன்னிலைப் படுத்தி வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். இவரது முதல் படத்தின் மூலம் தமிழ் இரசிகர்களின் முழு கவனத்தையும் ஈர்த்தவர்.  அதனைத் தொடர்ந்து,மெட்ராஸ், ‘கபாலி’ மற்றும்காலாபோன்ற படங்களை இயக்கினார். இவர், ரஜினியை வைத்து வரிசையாக தொடர்ந்து இரண்டு படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ஹிந்தியில்பிர்சா முண்டா’ என்ற படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன

#TamilSchoolmychoice

பரியேறும் பெருமாள்’ மற்றும்இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய இரண்டு படங்களை தயாரித்து வழங்கிய இவர், தற்போது அடுத்ததாக ஒரு படத்தை தயாரிக்கும் பணியில் இறங்க உள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ஹரி கிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஹாரி கிருஷ்ணன் ஆடுகளம் மற்றும் மெட்ராஸ் போன்ற படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.