Home Slider சரவணன் ஏற்பாட்டில் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பொங்கல் விழா

சரவணன் ஏற்பாட்டில் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பொங்கல் விழா

1064
0
SHARE
Ad

Saravanan-Sliderகோலாலம்பூர், ஜனவரி 20 – எதிர்வரும் பிப்ரவரி 2ஆம் தேதி  தலைநகர் டத்தாரான்  மெர்டேக்காவில் நடைபெறவிருக்கும் பொங்கல் விழாவில் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மஇகா தேசிய உதவித்தலைவர் டத்தோ எம். சரவணன் கூறியுள்ளார்.

மாலை 6.00 மணிக்குத் தொடங்கும் அந்த நிகழ்ச்சி இரவு 8.30 மணிவரை நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். பல்வேறு பாரம்பரிய கலைகள் இடம்பெறும் அவ்விழா இந்திய கலைஞர்களாலும், மலேசியக் கலைஞர்களாலும் படைக்கப்படும் என்று டத்தோ சரவணன் கூறினார்.

மேலும் கோலாலம்பூரில் சீனிநைனா முகம்மது எழுதி, ஆர். பி. எஸ் ராஜூ இசையமைத்த அவ்விழாவையொட்டிய சிறப்புப் பாடலொன்றை வெளியிட்ட அவர் செய்தியாளரகளிடம் பேசுகையில் இந்த பொங்கல் விழா நம் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்திக்கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்றார்.

#TamilSchoolmychoice

மஇகா கூட்டரசுப்பிரதேச இந்திய அறவாரியத்துடன் இணைந்து நடத்தப்படும் இவ்விழா ஆஸ்ட்ரோ ஒளி அலை 201 வழியாக இரவு 8.30 மணி முதல் 10.30 வரை ஒளிபரப்பப்படும்.

பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் மஇகா தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் கலந்து கொள்ளும் இந்நிகழ்வின் இறுதியில் வாண வேடிக்கைகளும், அலங்கார வாகனங்களின் அணிவகுப்பும் இடம்பெறும் என்றும் டத்தோ சரவணன் தெரிவித்தார்.