Home நாடு மரணத் தண்டனையை இரத்து செய்வதற்கு முன்பதாக சிந்தியுங்கள்!- மூசா

மரணத் தண்டனையை இரத்து செய்வதற்கு முன்பதாக சிந்தியுங்கள்!- மூசா

845
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் மரணத் தண்டனையை இரத்து செய்வதற்கு முன்பு, நம்பிக்கைக் கூட்டணி அரசு கிரிஸ்ட்சர்ச்சில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கருத்தில் கொள்ள வேண்டும் என முன்னாள் காவல் துறைத் தலைவர் மூசா ஹசான் கூறினார்.

நியூசிலாந்தில் மரணத் தண்டனை இல்லை. இம்மாதிரியான சூழ்நிலையில் பயங்கரவாதிகளுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. அந்த ஆடவனுக்கு தற்போது மரணத் தண்டனையை நியூசிலாந்து அரசு தர முடியாது.

ஒரு வேளை நான் கொலை செய்தாலும், அந்நாட்டில் எனக்கு மரண தண்டனை விதிக்கப்படாது” என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அந்த பயங்கரவாதியின் தாயாரும் அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று காணொளி ஒன்றில் பேசியிருக்கிறார்.

கடந்த நவம்பர் 13-ஆம் தேதி,  33 குற்றங்களுக்கான மரணத் தண்டனையை இரத்து செய்யலாம் என அமைச்சரவை முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.