கோலாலம்பூர்: மலேசியாவில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களைவிட கிராமப்புறங்களில் வாழும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என முர்னிநெட்ஸ் (MURNInets) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மலேசியாவில் உள்ள 11 மாநிலங்களில் இருந்து 31,733 பேர் கலந்துக் கொண்டனர். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உள்ள உறவு, சுற்றுச்சூழல் மற்றும் நட்புறவு, தொடர்பு முறை, மக்களின் பாதுகாப்பு, மற்றும் சுகாதார வசதிகள் ஆகிய அம்சங்கள் இந்த ஆய்வில் கணக்கெடுக்கப்பட்டன.
கோலா திரெங்கானு மாவட்ட நகராட்சி, பெட்டாலிங் ஜெயா நகராட்சி, மஞ்சோங் மாவட்ட நகராட்சி, பத்து காஜா மாவட்ட நகராட்சி, பெந்தோங் நகராட்சி, ஜாசின் நகராட்சி, ஜெலி மாவட்ட நகராட்சி, செகாமாட் நகராட்சி, பாடாங் தெராப் மாவட்ட நகராட்சி மற்றும் பண்டார் பாரு மாவட்ட நகராட்சிகளில் வாழும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆய்வில் 81.5 விழுக்காட்டினர் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.