Home கலை உலகம் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத்

ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத்

2066
0
SHARE
Ad

சென்னை – மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க இயக்குநர் விஜய் முயற்சிகள் எடுத்து வருகிறார். மதராஸ் பட்டணம், தெய்வத் திருமகள், சைவம் போன்ற படங்களை எடுத்த இயக்குநர் விஜய்யின் படத்தில் ஜெயலலிதா பாத்திரத்தில் பிரபல இந்திப் பட நடிகை கங்கனா ரனாவத் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தி, தமிழ் என இரு மொழிகளில் எடுக்கப்படும் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு ‘தலைவி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திப் பதிப்புக்கு ‘ஜெயா’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஜெயலலிதா போன்ற ஒரு முக்கிய் தலைவியின் படத்தை எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும் இந்தப் படத்தை எடுக்கப் போவதாகவும் விஜய் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தப் படத்திற்கான திரைக்கதையை விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். இவர்தான் பாகுபலி படத்தின் திரைக்கதையை வடிவமைத்தவர். பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலியின் தந்தைதான் விஜயேந்திர பிரசாத்.