Home நாடு “பங்களா பறிமுதல் முறைகேடானது” – ஜோ லோ மலேசிய அரசாங்கத்தை சாடினார்

“பங்களா பறிமுதல் முறைகேடானது” – ஜோ லோ மலேசிய அரசாங்கத்தை சாடினார்

1320
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தலைமறைவாக இருக்கும் – தேடப்படும் குற்றவாளியான ஜோ தெக் லோ – தனது குடும்பத்தினருக்குச் சொந்தமான பினாங்கு தஞ்சோங் பூங்கா பங்களா, அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டது முறைகேடானது எனச் சாடியுள்ளார்.

“அந்த பங்களா 20 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்டது. 1எம்டிபி விவகாரம் தலையெடுப்பதற்கு பல ஆண்டுகள் முன்னரே அந்த பங்களா வாங்கப்பட்டது. அப்போது நான் பதின்ம வயதில் இருந்தேன். எனவே அந்தப் பங்களாவுக்கும் 1எம்டிபிக்கும் தொடர்பில்லை” என ஜோ லோ கூறியிருக்கிறார்.

தனக்கு எதிராக ஊடகங்கள் மூலமான குற்ற விசாரணைகள் நடைபெறுவதாகவும், நாட்டிற்கு திரும்பி வந்தாலும் தனக்கு நியாயமான நீதிமன்ற விசாரணை கிடைக்க வாய்ப்பில்லை என்றும் ஜோ லோ மேலும் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

கடந்த 20 ஆண்டுகளாக மலேசிய அரசாங்கத்திற்கு இந்த பங்களா மீது எந்தவித அக்கறையும் இல்லாதபோது இப்போது மட்டும் இந்த பங்களாவை பறிமுதல் செய்வது ஏன்? என்றும் தான் வெளியிட்ட அறிக்கையில் கேள்வி எழுப்பியிருக்கும் ஜோ லோ “விவகாரங்களை அரசியலாக்கும் மகாதீரின் போக்கை இது காட்டுகிறது என்றும் சட்ட நடைமுறைகளை மதிக்காமல் நடப்பு அரசாங்கம் செயல்படுவதாகவும் குறை கூறியிருக்கிறார்.

அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட அந்த பங்களா ஜோ லோவின் தாயார் 66 வயதான கோ கெய்க் இவி பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சொத்தாகும்.