Home நாடு ஜோ லோவின் 15 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள வீடு பறிமுதல்

ஜோ லோவின் 15 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள வீடு பறிமுதல்

823
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: தஞ்சோங் பூங்காவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோவின் மூன்று மாடி சொகுசு வீடு, காவல் துறையினரால் கடந்த வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

புக்கிட் அமானின் பண மோசடி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் வியாழனன்று 15 மில்லியன் விலைமதிப்புள்ள அந்த வீட்டைப் பறிமுதல்  செய்த அறிவிப்பு அறிக்கையை வெளியிட்டனர்.

காவல் துறையினரின் வருகையின் போது வீட்டில் யாரும் தங்கியிருக்கவில்லை என நம்பப்படுகிறது. அவ்வீட்டின் உரிமையாளர் கோ காய்க் ஈவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் 76 வயதான ஜோ லோவின் தாயாராவார்.