தேசிய முன்னணியின் வெற்றியை நிலைநாட்ட வேண்டுமானால், அம்னோ, மசீச மற்றும் மஇகா கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை அவர் முன்னிலைப் படுத்திப் பேசினார். ரந்தாவ் சட்டமன்ற மசீச தேர்தல் இயந்திரத்தை மசீச கட்சித் தலைவர் டாக்டர் வீ கா சியோங் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
கடந்த 14-வது பொதுத் தேர்தலில், ரந்தாவ் சட்டமன்றத்தில், முகமட் ஹசான் போட்டியின்றி வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அப்போது, நம்பிக்கைக் கூட்டணி தரப்பில் முகமட் ஹசானை எதிர்த்து போட்டியிடுவதற்கு டாக்டர் ஶ்ரீராமிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இம்முறை, நடக்கவிருக்கும் இடைத் தேர்தலில் மீண்டும் இவ்விருவரும் போட்டியில் இறங்க உள்ளனர்.