கோலாலம்பூர்: ஊடகவியலாளர்கள் விவகாரத்தில் எக்காரணத்தைக் கொண்டும் குறுக்கிட வேண்டாம் என தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தனது டுவிட்டர் பக்கம் வாயிலாதத் தெரிவித்துள்ளார்.
“உண்மையை வெளிப்படுத்த அவர்கள் அங்கு கூடியுள்ளார்கள். நீங்கள் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், உங்கள் உண்மைகளை அவர்களிடம் விளக்க வேண்டும். அது எழுத்துப்பூர்வமாகவும் இருக்கலாம். அதனைவிடுத்து அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதும், மிரட்டுவதும் சதியான செயலாக அமையாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை, இரண்டு அம்னோ தலைவர்கள், மலேசியாகினி செய்தி சேகரிப்பாளர்களை தகாத வார்த்தையால் திட்டியும், நெருக்கமாக நின்று மிரட்டியதுமாக மலேசியாகினி செய்தித் தளம் குறிப்பிட்டிருந்தது.