Home இந்தியா சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் – ஹெச்.இராஜா மோதுகின்றனர்

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் – ஹெச்.இராஜா மோதுகின்றனர்

901
0
SHARE
Ad

சென்னை – கடந்த சில நாட்களாக சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுவது யார் என நீடித்து வந்த இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அங்கு பாஜக சார்பில் போட்டியிடும் ஹெச்.இராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் களமிறங்குவதால், யார் அங்கு வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில் 2014 பொதுத் தேர்தலில் சிவகங்கை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தனது தந்தையார் ப.சிதம்பரத்திற்கு பதிலாக இந்த முறை போட்டியிடும் கார்த்தி வெற்றிக் கனியைப் பறிப்பாரா என்ற ஆர்வமும் அரசியல் பார்வையாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.