Home கலை உலகம் இந்திய எவென்ஜர்ஸ்: எண்ட்கேம் படத்திற்கான பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை!

இந்திய எவென்ஜர்ஸ்: எண்ட்கேம் படத்திற்கான பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை!

810
0
SHARE
Ad

புது டில்லி: ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், எவென்ஜர்ஸ்: எண்ட்கேம் திரைப்படத்திற்கான பாடலுக்கு இசையமைத்துள்ளார் என இந்திய மார்வெல் நிறுவனம் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளது. இத்திரைப்படம் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளிவர உள்ளது.

மேலும், இந்த இசை வெளியீடு வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியிடப்படும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

என் சொந்த குடும்பத்திலேயே மார்வெல் இரசிகர்களால் சூழப்பட்டிருப்பதால், எவென்ஜர்ஸ்: எண்ட்கேம் திரைப்படத்திற்கான மிகவும் திருப்திகரமான, பொருத்தமான இசையை அமைப்பதில் மிகுந்த வேலைகள் செய்ய வேண்டியிருந்தது. மார்வெல் இரசிகர்கள் மற்றும் இசை இரசிகர்கள் இந்த இசையை விரும்புவார்கள் என நம்புகிறேன்என்று ரஹ்மான் கூறினார்.

#TamilSchoolmychoice

எவென்ஜர்ஸ்: இன்பினிட்டி வோர் திரைப்பட வெற்றிக்குப் பிறகு, எவென்ஜர்ஸ்: எண்ட்கேம் படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எவென்ஜர்ஸ்: எண்ட்கேம், ஒரு படம் மட்டுமல்ல, இந்தியாவில் எல்லா இடங்களிலும் இரசிகர்களுக்கான உணர்ச்சிபூர்வமான பயணமாக அமையும். அதன் வெற்றியை இரசிகர்கள் மத்தியில் வைத்து கொண்டாடுவதில் ஏ.ஆர். ரஹ்மானின் இசையே சரியான தேர்வாக இருக்க முடியும் என மார்வெல் குறிப்பிட்டுள்ளது.

இந்திய இரசிகர்களுக்கு நாங்கள் செய்யக்கூடிய நன்றியாக இது அமைகிறது” என இந்திய மார்வெல் ஸ்டுடியோ தலைமை இயக்குனர் பிக்ரம் டுக்கால் கூறினார்.

வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படம் இந்தியா முழுவதிலும் வெளியிடப்படும்.