Home நாடு குழந்தைகளின் குடியுரிமை விவகாரத்தில் உள்துறை அமைச்சு பொறுப்பற்று நடக்கிறது!

குழந்தைகளின் குடியுரிமை விவகாரத்தில் உள்துறை அமைச்சு பொறுப்பற்று நடக்கிறது!

654
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஒரு குழந்தையின் பெற்றோர்களில், யாரேனும் ஒருவர் மலேசிய குடியுரிமை பெற்றவர்களாக இருந்தால், தானாகவே அக்குழந்தையும் மலேசிய குடியுரிமைப் பெற தகுதியுடையதாகிறது என லோயர்ஸ் பார் லிபர்டி (எல்எப்எல்) தெரிவித்தது.

குடியுரிமை இல்லாத குழந்தைகளின் பிரச்சினை தொடர்பாக உள்துறை அமைச்சின் அணுகுமுறை, பொறுப்பற்றது மற்றும் கூட்டரசு அரசியலமைப்பிற்கு முரணாக உள்ளதுஎன சுரேந்திரன் கூறினார்.

இதே மாதிரியான அணுகுமுறையை முந்தைய அரசாங்கமான தேசிய முன்னணி பின்பற்றிக் கொண்டிருந்தது. இதனாலேயே, பல குழந்தைகள் மலேசியக் குடியுரிமை பெற இயலாமல் போனது” என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பெற்றோர்களின் திருமணத் தகுதியைக் கேட்கும் உள்துறை அமைச்சின் செயல்முறை, கூட்டரசு அரசியலமைப்பில் உள்ள சட்டத்திற்கு முரணாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் பேசிய துணை உள்துறை அமைச்சர் அஜிஸ் ஜம்மான், குழந்தையின் தாயார் மலேசிய குடியுரிமையைக் கொண்டிருந்தால் மட்டுமே, அக்குழந்தைக்கு குடியுரிமை வழங்கப்படும் எனக் கூறியதற்கு சுரேந்திரன் இவ்வாறு கருத்துரைத்தார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசின் இந்த நிலைப்பாடு கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தை மட்டும் மீறுவதோடு இல்லாமல், நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிக்கு எதிராக அமைந்துள்ளது எனக் கூறினார்.

இந்த விவகாரத்தில் அசராங்கம் உடனே, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சுரேந்திரன் கேட்டுக் கொண்டார்.