Home இந்தியா அபினந்தன் மீண்டும் ஶ்ரீநகர் திரும்பினார்!

அபினந்தன் மீண்டும் ஶ்ரீநகர் திரும்பினார்!

1226
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவின் வீரராகக் கருதப்படும் அபினந்தன் மீண்டும் ஶ்ரீநகர் திரும்பி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பாகிஸ்தானின் பிடியில் இரண்டு நாட்கள் வைக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் நான்கு வார மருத்துவ விடுப்பில் வைக்கப்பட்டார். 12 நாட்கள் விசாரணைக்கு பின்னர் அபினந்தன் விடுமுறையில் அனுப்பப்பட்டார்.

ஜம்முகாஷ்மீரின் புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜய்ஷ்முகமட் அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானைப்படை கடந்த மாதம் 26-ஆம் தேதி குண்டுகள் வீசியது. இதற்கு அடுத்த நாள், பாகிஸ்தான் போர் விமானங்கள், இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்தியது. அப்போது இந்திய போர் விமானங்கள், அத்தாக்குதல்களை தடுத்து நிறுத்தின. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை, இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் சுட்டு வீழ்த்தினார்.

இந்நிலையில், அபினந்தன் சென்ற மிக்-21 ரக போர் விமானம் பாகிஸ்தான் விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால், விமானத்தில் இருந்து உயிர் தப்பிய அபினந்தன், பாகிஸ்தான் எல்லையில் தரையிரங்கியதால் அவரை பாகிஸ்தான் இராணுவம் கைது செய்தது.