Home கலை உலகம் விஷாலுக்கு ஏற்பட்ட காயத்திற்கு அனிஷாவை குறி வைப்பது மூடத்தனம்!

விஷாலுக்கு ஏற்பட்ட காயத்திற்கு அனிஷாவை குறி வைப்பது மூடத்தனம்!

1594
0
SHARE
Ad

சென்னை: அண்மையில், விஷால்அனிஷா இருவரின் நிச்சயதார்த்தம் நல்லமுறையில் நடந்து முடிந்தது. தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவர்நடிகர் சங்க பொதுச் செயலாளர் என தமிழ் திரை உலகில் மிகப்பெரிய பொறுப்புகளில் நடிகர் விஷால் இருந்து வருகின்றார்.

விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷா அல்லா ரெட்டிக்கும் அண்மையில் ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததுஇதில் நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

இதற்கிடையே, நடிகர் விஷால் தற்போது இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் நடிகை தமன்னா இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் நடந்துக் கொண்டிருக்கும் வேளையில்,  விஷால் வில்லன்களுடன் மோதுவது போன்ற சண்டை காட்சியில் ஏற்பட்ட சிறிய விபத்தால் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்திற்கு உள்ளானார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் படக்குழுவினர் கொண்டு சேர்த்தனர்

#TamilSchoolmychoice

கை மற்றும் கால்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். இச்செய்தி வெளிவந்து செய்தித் தளங்களில் பரவலாகி வரும் நிலையில், பொறுப்பற்ற ஒரு சில நபர்கள், “இன்னும் திருமணமே நடக்கவில்லை, அதற்குள்ளாக இப்படியெல்லாம் நடக்கிறதா?” என்ற மூடத்தனமான கருத்துகளை சமூகப்பக்கங்களில் பதிவிட்டு வந்தனர்.

இதனை எதிர்த்து இரசிகர்களும், இக்கருத்துகளுக்கு பதில் கூறி வருகின்றனர். இன்னமும், இந்தியர்கள் தேவையற்ற, மூடத்தனமான நம்பிக்கைகளை பெரிதாக எண்ணி, எதார்த்த வாழ்க்கையை கோட்டை விடுகின்றனர் என இரசிகர்கள் சாடி உள்ளனர்.

விஷாலுக்கு ஏற்பட்டக் காயத்தினால் படப்பிடிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மீண்டும் எப்போது படப்பிடிப்பு நடக்கும் என்பதை படக்குழுவினர் எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை.