Home நாடு குறைந்த விலை பல்பொருள் அங்காடி மையத்தை திறக்க ஜோகூர் சுல்தான் முடிவு!

குறைந்த விலை பல்பொருள் அங்காடி மையத்தை திறக்க ஜோகூர் சுல்தான் முடிவு!

1308
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: கூடிய விரைவில் ஜோகூரில் உள்ள பெரிய விற்பனை மையம் ஒன்றோடு இணைந்து குறைந்த விலையில் பொருட்களை விற்கும் பல்பொருள் அங்காடி மையத்தை அமைக்க உத்தேசித்துள்ளதாக சுல்தான் இப்ராகிம் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட அந்த பல்பொருள்அங்காடி மையம்குறைந்தவிலையில்மக்களின் அத்தியாவசியப் பொருட்களைவிற்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

10 விழுக்காட்டிற்கு குறைந்த விலையில், தரமான பொருட்களை இந்த மையம் விற்பனை செய்யும் எனவும் அவர் தெளிவுப்படுத்தினார். இதன் மூலமாக, குறந்த வருமானம் பெறும் குடும்பங்கள் அவர்களுக்குத் தேவையான பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் குறித்து கூடிய விரைவில் தாம் முறையான அறிவிப்பாக அறிவிக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.