Home நாடு கெடா: நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க புதிய அணுகுமுறை!

கெடா: நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க புதிய அணுகுமுறை!

830
0
SHARE
Ad

அலோர் ஸ்டார்: கெடா மாநிலத்தை பசுமைமிக்க மாநிலமாக உருவாக்குவதற்காக, அம்மாநிலத்தில் நெகிழி பொருட்களைப் பயன்படுத்தும் வழக்கத்தை குறைப்பதற்கு இன்று திங்கட்கிழமை முதல் ஒரு சில நெகிழிப் பொருட்களை பயன்படுத்தாமலிருக்க கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

எப்போதும் போல, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நெகிழிப் பைகளை உபயோகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள வேளையில், உறிஞ்சி குழாய் (ஸ்ட்ரோ) போன்ற பொருட்கள் மக்கள் கேட்டால் மட்டுமே கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், உணவுப் பொருட்களை நுரைப்பம் (போலிஸ்திரின்) கொண்டு விநியோகிக்காமல் இருப்பதையும் அரசு உறுதிபடுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபடியான நெகிழி வகையானப் பொருட்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதோடு, நிலத்தின் பசுமையும் பாதிப்புக்கு உள்ளாகுகிறது என மாநில சுற்றுசூழல் மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.