Home இந்தியா ராகுல் காந்தி அமேதி- வயநாடு தொகுதிகளில் போட்டி!

ராகுல் காந்தி அமேதி- வயநாடு தொகுதிகளில் போட்டி!

641
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவின் மக்களைவத் தேர்தலில் முதல் முறையாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியைத் தவிர்த்து, கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அக்கட்சி தெரிவித்து உள்ளது.

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும், தன் குடும்பத் தொகுதியாகக் கருதப்படும் அமேதியில் ராகுல் போட்டியிட இருக்கும் வேளையில், இரண்டாவது தொகுதியும் தற்போது ராகுலுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமேதியில் அவரை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பாஜக சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ராகுல் காந்தி கூடுதலாக ஒரு தொகுதியில் தென் மாநிலங்களில் போட்டியிட வேண்டும் என கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

கடந்த 2009-ஆம் ஆண்டு தேர்தலில் சோனியா காந்தி அமேதியிலும், கர்நாடக மாநிலமான பெல்லாரியிலும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.