Home நாடு நஜிப்: 1.5 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வரியைச் செலுத்த உத்தரவு!

நஜிப்: 1.5 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வரியைச் செலுத்த உத்தரவு!

1291
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1.5 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வரிவை செலுத்த உள்நாட்டு வருவாய் வாரியம், முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி உள்ளது. இது குறித்த தகவலை டி எட்ஜ் தெரிவித்ததாக ஸ்டார் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஒரு வாரத்திற்கு முன்பதாகவே, முன்னாள் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி விட்டதாகவும், இந்த வரியானது 2011-ஆம் ஆண்டிலிருந்து 2017-ஆம் ஆண்டு வரையிலும் அவர் செலுத்த வேண்டிய கூடுதல் வரி எனவும் அந்த நிதி தினசரி அறிவித்துள்ளது.

மேலும், இதுவரையிலும் சுமார் 4 பில்லியன் ரிங்கிட் வருமானத்தை நஜிப் இன்னும் அறிவிக்கவில்லை என வருமான வரி வாரியம் குறிப்பிட்டுள்ளது. 1எம்டிபி நிதியிலிருந்து பெற்ற 2.6 பில்லியன் ரிங்கிட் நிதியும் இதில் அடங்கும் என அது குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதி நஜிப் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் குறித்த 42 மில்லியன் வழக்கு விசாரணை தொடங்க இருக்கும் வேளையில், இந்த தகவலை வருமான வரி வாரியம் வெளியிட்டுள்ளது.