Home நாடு கேமரன் மலை விவசாயிகளின் வெளியேற்றத்தைக் கண்டித்து அமைதிக் கூட்டம்!

கேமரன் மலை விவசாயிகளின் வெளியேற்றத்தைக் கண்டித்து அமைதிக் கூட்டம்!

1358
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கேமரன் மலை: கேமரன் மலை விவசாயிகளின் வெளியேற்றத்தைக் கண்டித்து, பகாங் மாநில அரசாங்கத்திற்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைதி ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த அமைதி ஊர்வலத்தில் ஜசெக கட்சி உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர்.

பகாங் சுல்தான் மீதான விசுவாசத்தைப் பிரதிபலிக்கும் வண்ணமாக, அவர்கள் தங்களின் கைகளில் மஞ்சள் நிற பூக்களை ஏந்தி, இந்த விவகாரத்தில் அவர் தலையிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள். 

இந்தக் கூட்டத்தில் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. இராமசாமி, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் குணராஜ் மற்றும் சாபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரை ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

பல வருடங்களாக நிலத்தில் பயிரிட்டு வந்த விவசாயிகளுக்கு மாநில அரசு மாநில விதித்த கொடுமை இது என இராமசாமி குறிப்பிட்டார்.

கடந்த 1969-ஆம் ஆண்டில் விவசாயி ஒருவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால நில உரிமத்தையும் அவர் ஆதாரமாகக் காட்டினார்.

இதற்கிடையில், இம்மாதிரியான உரிமங்கள் கடந்த 26 வருடத்திற்கு முன்னதாக வழங்கப்பட்டது எனவும், இராமசாமி கூறுவது போல, 60 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்டது அல்ல என பகாங் மாநில முதலைமச்சர் வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் குறிப்பிட்டிருந்தார்.

மக்களுக்கு நடக்கும் அநீதிகளை எந்த வித இனம், மதம், அரசியல் என பாராமல் நான் தட்டிக் கேட்பேன்” என இராமசாமி தெரிவித்தார்.

சட்டவிரோதமான இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு, அவை ஆற்றில் கலக்கப்படுவதால், விவசாயிகளின் வெளியேற்றம் துரிதப்படுத்தப்பட்டது என வான் ரோஸ்டி குறிப்பிட்டிருந்தார். ​​