ஷா அலாம்: பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் மீதான புலன் விசாரணையை மூடி மறைப்பதற்கு உதவுவதாகக் கூறிய தொழிலதிபர் டத்தோஶ்ரீ ஜி. ஞானராஜா மீது இன்று புதன்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது. ஆயினும், தம்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றங்களையும் அவர் புரியவில்லை என நீதிபதியின் முன்னிலையில் கூறி அக்குற்றச்சாட்டுகளுக்கு விசாரணைக் கோரினார்.
கொன்சோர்தியம் செனித் கொன்ஸ்ட்ராக்ஷன் செண்டெரியான் பெர்ஹாட்டின் தலைமை நிருவாகியான சாருலுக்கு எதிராக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் செயல்படாமல் இருப்பதற்காக, தனது அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி உதவுவதாகக் கூறி ஏமாற்றியதன் காரணமாக அவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
100,000 ரிங்கிட் பிணையில் அவரை நீதிபதி விடுவித்ததோடு, நாளை வியாழக்கிழமை அவரது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கு வருகிற மே மாதம் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.