Home நாடு ரந்தாவ்: டாக்டர் ஶ்ரீராமை களம் இறக்க 4 காரணங்கள்!- அன்வார்

ரந்தாவ்: டாக்டர் ஶ்ரீராமை களம் இறக்க 4 காரணங்கள்!- அன்வார்

676
0
SHARE
Ad

ரந்தாவ்: நேற்று செவ்வாய்க்கிழமை ரந்தாவில் நடந்த மூன்று வெவ்வேறு பிரச்சார நிகழ்ச்சிகளில் பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இம்ராகிம் கலந்துக் கொண்டு பேசினார். கட்சிக்குள் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் இருந்த போதிலும், மலாய்க்காரர் அல்லாத, டாக்டர் ஶ்ரீராமை வேட்பாளராக அறிவித்ததன் காரணத்தை இடம் பார்த்து பேசியதாக மலேசியாகினி பதிவிட்டுள்ளது.

மலாய்க்காரர்கள் அதிகம் உள்ள இடத்தில் மலாய் சமூகத்தினரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக பேசியும், பின்பு இந்தியர்கள் அதிகமாக உள்ள கூட்டத்தில் ஶ்ரீராமை உயர்த்தி வைத்துப் பேசியதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய வேட்பாளரை களத்தில் இறக்குவேன் என தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக ஶ்ரீராமை களம் இறக்கியதாக அவர் கூறினார்.  மலாய்க்காரர்களின் நலன் எப்போதும் பாதிக்கப்படாது எனவும் அவர் கூறினார். நெகெரி செம்பிலான் மாநிலத்தின் மந்திரி பெசாரும், நாட்டு பிரதமரும் மலாய்க்காரர்களாக இருக்கையில் இது நடக்காது என அவர் குறிப்பிட்டார்.  மேலும், மலாய்க்காரர்கள் அதிகமாக கூடியிருந்தக் கூட்டத்தில், சூடான் மற்றும் ஆப்கானிஸ்தானில் முஸ்லீம்களுக்கான மனிதாபிமானப் பணிக்கு நன்றி செலுத்தும் வகையில் ஶ்ரீராமை களத்தில் இறக்கியதாகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஶ்ரீராமை ரந்தாவ் இடைத் தேர்தலின் வேட்பாளராக அறிவித்தது கட்சிக்குள் குழப்படியை ஏற்படுத்தியிருந்தது. ஆயினும், முன்னதாக தாம் கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்றவாறு, ஶ்ரீராமை அப்பகுதியில் வேட்பாளராக நிறுத்தியதாக அன்வார் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக, ஜெராம் பாடாங் தொகுதியில் மலாய்க்காரரை நிறுத்திக் காரணத்தினால்தான், அதற்கு பதிலாக ரந்தாவில் இந்திய வேட்பாளரை நிறுத்தியதாக அவர் கூறினார்.