Home நாடு ஜோ லோவின் சொகுசு உலாப்படகு 126 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை!

ஜோ லோவின் சொகுசு உலாப்படகு 126 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை!

812
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜோ லோவின் கைப்பற்றப்பட்ட ஆடம்பர உலாப்படகு (இக்குனாமிட்டி) அதிகபடியான தள்ளுபடிக்கு விற்கப்படும் எனக் கூறப்பட்டு வந்த வேளையில், சுமார் 126 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (514.14 மில்லியன் ரிங்கிட்) அதனை கெந்திங் மலேசியா செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனம் வாங்கிக் கொண்டதாக ஸ்டார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தகவலை அரசாங்க தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் உறுதிபடுத்தினார். 130 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (531 மில்லியன் ரிங்கிட்) விற்கப்படும் என அரசாங்கம் முடிவு செய்திருந்தது, ஆயினும் தற்போது 126 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறது.

மலேசிய தொழிலதிபர் ஜோ லோவுக்கு சொந்தமான இந்த சொகுசு உலாப்படகு, 1எம்டிபி நிதியிலிருந்து வாங்கப்பட்டது என நம்பப்படுகிறது.