Home One Line P1 தலையணை, மெத்தை இல்லாது பலகைப் படுக்கையில் தூங்கினேன்!- குவான் எங்

தலையணை, மெத்தை இல்லாது பலகைப் படுக்கையில் தூங்கினேன்!- குவான் எங்

520
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்படுவதற்கு முன்னர் புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தடுப்புக் காவலில் ஓரிரவைக் கழித்த தனது அனுபவத்தை ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் விவரித்தார்.

நேற்றிரவு ஒரு முகநூல் பதிவில், முன்னாள் பினாங்கு நிதியமைச்சரும், முதலமைச்சருமான அவர் எப்படி பலகை படுக்கையில் தூங்கினார் என்பதையும், 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்குகளில் தடுத்து வைக்கப்பட்டபோது “முந்தைய நிதியமைச்சர் நஜிப் ரசாக் இது போலவே நடத்தப்பட்டாரா என்பதையும் நினைவுக்  கூர்ந்தார்.

“நான் என்னை எம்ஏசிசியின் ஆரஞ்சு உடைக்கு மாற்ற வேண்டியிருந்தது. ஒரு குறுகிய சிறையில் (தலையணைகள் அல்லது மெத்தைகள் இல்லாமல்) ஒரு பலகையில் படுக்கைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

#TamilSchoolmychoice

“எம்ஏசிசி மட்டுமே அதற்கு பதிலளிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

தனது மனைவி பெட்டி சியூவும் நேற்று பினாங்கில் எம்ஏசிசியால் கைது செய்யப்பட்டார் என்பதைக் கண்டு தான் ஏமாற்றமடைந்ததாகவும், அதே விஷயத்தை அவர் எதிர்கொள்வார் என்ற கவலையில் இருந்ததாகவும் லிம் கூறினார்.

“(மனைவி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்) அவருக்கு சுரங்கப்பாதை திட்டத்துடனோ அல்லது அரசாங்க விஷயங்களுடனோ எந்த தொடர்பும் இல்லை.

“அவர் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டபோது எனக்கு கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. அவர் என்னைப் போன்ற எம்ரஏசிசி சிறையில் ஒரே இரவில் தடுத்து வைக்கப்படுவாரா என்றும் நான் கவலைப்பட்டேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

2008 முதல் 2018 வரை பினாங்கு முதல்வராக இருந்த லிம், தான் அரசியல் நடவடிக்கைக்கு பலியாக்கப்பட்டேன் என்ற தனது கூற்றை மீண்டும் வலியுறுத்தினார்.

“தேசிய கூட்டணி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் எனக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது என்பதில் நான் ஆச்சரியப்படவில்லை. ஏனென்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இந்த அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அவர்களின் குறுகிய பெரும்பான்மையை வலுப்படுத்த வேண்டும்.

“ஆனால், அவர்கள் என் மனைவியை குறிவைக்கும் அவர்களது நடவடிக்கை, இரக்கமின்றி ஆன்மாவை சித்திரவதை செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறது,” என்று அவர் கூறினார்.

பினாங்கில் 6.3 பில்லியன் ரிங்கிட் கடலடி சுரங்கப்பாதை திட்டம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் நேற்று லிம் குற்றம் சாட்டப்பட்டார்.

அதே நாளில், பட்டர்வொர்த் நீதிமன்றத்தில் பணமதிப்பிழப்பு தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் சட்டம் 2001 (அம்லா) கீழ் அவரது மனைவி மீது குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று, இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் ஊழல் தொடர்பான குற்றத்தை மறுத்ததை அடுத்து, லிம் குவான் எங்கிற்கு இருவர் உத்தரவாதத்துடன் நீதிபதி ஒரு மில்லியன் ரிங்கிட் பிணை வழங்கினார்.

மேலும், அவரது அனைத்துலக கடப்பிதழ்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி அசுரா அல்வி உத்தரவிட்டார்.

பினாங்கில் பிரதான சாலை மற்றும் சுரங்கப்பாதை கட்டுமான திட்டத்தை செயல்படுத்த, ஒரு நிறுவனத்தை நியமிக்க உதவியதற்காக இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் அமர்வு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

குற்றச்சாட்டின் படி, லிம், பினாங்கு முதல்வராக இருந்த காலத்தில், டத்தோ சாருல் அகமட் முகமட் சுல்கிப்லி பெற வேண்டிய இலாபத்தில் இருந்து, 10 விழுக்காடு மதிப்புள்ள வெகுமதியை இலஞ்சமாகக் கோரியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

பினாங்கு நகரில் பிரதான சாலை மற்றும் சுரங்கப்பாதை கட்டுமான திட்டத்தை மேற்கொள்ள சாருலுக்கு சொந்தமான நிறுவனங்களை நியமிக்க உதவிதற்கு ஒரு ஊதியமாக இந்த தொகைப் பெறப்பட்டதாகக் கூறப்பட்டது.

2011 மார்ச் மாதம் மிட் வெலி சிட்டியின் சைட் புத்ரா வட்டம், தி கார்டன்ஸ் தங்கும் விடுதி அருகே பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் இந்த குற்றத்தினை செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009- இன் பிரிவு 16 – இன் படி இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுகிறது. அதே சட்டத்தின் பிரிவு 24-இன் கீழ் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இலஞ்சம் பெற்ற மதிப்பை விட ஐந்து மடங்கு அல்லது 10,000 ரிங்கிட் குறையாத அபராதமும் விதிக்கப்படும்.