Home One Line P1 எந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை நாங்கள் தீர்மானிப்போம்!- மகாதீர்

எந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை நாங்கள் தீர்மானிப்போம்!- மகாதீர்

506
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலாய்க்காரர்களுக்காக ஒரு புதிய கட்சி அமைப்பதை அறிவித்த பின்னர், அரசியல் என்பது பெரிய அளவில் இல்லாமல், உறுதியான உறுப்பினர்களைக் கொண்டிருந்தால் அது சிறந்ததாக இருக்கும் என்று டாக்டர் மகாதீர் முகமட் தமது ஆதரவாளர்களிடம் கூறினார்.

அரசாங்கம் அமைப்பதற்கு போதுமான தொகுதிகளை கட்சி வெல்லாமல் இருக்கலாம், ஆனால், அடுத்த தேர்தலில் எந்த முகாம் வெற்றி பெறும் என்பதை தீர்மானிப்பதில் கட்சி முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.

“நாங்கள் போட்டியிடும்போது, அரசாங்கத்தை அமைப்பதற்கு எங்களுக்கு போதுமான பெரும்பானமை கிடைக்காது, ஆனால் யார் வெல்வார்கள் என்பதை தீர்மானிக்கக்கூடிய ஒரு கட்சியாக நாங்கள் இருக்க முடியும்.

#TamilSchoolmychoice

“எங்கள் கட்சி நேர்த்தியாக இருந்தால், நாங்கள் யாரைத் தேர்ந்தெடுப்போம் என்பதை நாங்கள் முடிவு செய்ய முடியும். நாங்கள் ஒரு முக்கிய பங்கை வகிப்போம் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் யார் வெல்வார்கள் என்பதை நாங்கள் தீர்மானிப்போம்” என்று டாக்டர் மகாதீர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நேற்று, டாக்டர் மகாதீர் முகமட் புதிய கட்சி ஒன்றை அமைப்பதாக அறிவித்தார். ஆயினும், அதற்கான பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அவர் கூறியிருந்தார்.

இப்புதிய கட்சிக்கு முக்ரிஸ் மகாதீர் தலைவராக இருப்பார் என்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இப்புதிய கட்சி எந்தவொரு கட்சியுடனும் பிணைக்கப்படாது என்றும், ஊழலை ஒழிப்பதற்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் என்றும் அவர் கூறினார்.

“எங்கள் அசல் போராட்டத்தைத் தொடர, நாங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் அல்லது புதிய கட்சி உறுப்பினர்களாக வேண்டும்.

“மலாய்க்காரர்கள் அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் இருந்தாலும், தேசத்தின் கௌரவம், மதம் மற்றும் அதிகாரத்திற்காக ஏங்குபவர்களினால் போராட்டத்தின் திசையை தகர்த்துவிடுகிறது” என்று அவர் கூறியிருந்தார்.