கோலாலம்பூர்: தொழிலதிபர் ஜி. ஞானராஜாவின் ‘டத்தோஶ்ரீ’ பட்டம் பறிக்கப்பட்டதாக வெளியிடப்படும் செய்திகளில் உண்மை இல்லை என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்து வந்த நிலையில், அவரது பட்டம் பறிக்கப்பட்டதாக பகாங் மாநில தலைமைச் செயலாளார் டத்தோஶ்ரீ டாக்டர் சாலேஹுட்டின் இஷாக் கூறினார்.
இனிமேல், அவர் டத்தோஶ்ரீ பட்டத்தை ஏற்றிருக்க முடியாது எனவும், அதனை மாநில செயலாளர் அலுவலகத்தில் கூடிய விரைவில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் 13-ஆம் தேதி வெளியான கடிதம் ஒன்றில், பகாங் மாநில அரசு அவருக்குக் கொடுத்த டத்தோஶ்ரீ பட்டத்தினை மீண்டும் பெற்றுக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. சமூக ஊடகங்களில் அந்த கடிதத்தின் நகல் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது.
இதற்கிடையே, தம்மைக் குறி வைத்து வெளியிடப்படும் வதந்திகள் இவை என ஞானராஜா முன்னதாக தெரிவித்திருந்தார்.