Home Video குப்பத்து ராஜா: சென்னை தமிழில் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் மோதல்!

குப்பத்து ராஜா: சென்னை தமிழில் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் மோதல்!

1630
0
SHARE
Ad

சென்னை:  தமிழ் திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இடம் பிடித்துள்ளார். சர்வம் தாளமயம் படத்திற்குப் பிறகு இயக்குனர் ஆர்.எஸ். பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், பூணம் பஜ்வா, பார்த்திபன் மற்றும் யோகி பாபு நடிக்கும்குப்பத்து ராஜாபடத்தின் முன்னோட்டக் காணொளி சமீபத்தில் வெளியானது.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் இருக்கும் இளைஞனாக வருவது போல காட்சியமைக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  

சென்னை தமிழில் வசனங்கள் பெருவாறாக அமைந்துள்ளது. இந்த முன்னோட்டக் காணொளியில் பார்த்திபனுக்கும், ஜி.வி.பிரகாஷுக்கும் இடையே ஏற்படும் மோதல் விறுவிறுப்பாக நகர்வது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷின் இசையும் படத்தின் ஆர்வத்தை அதிகரித்து உள்ளது.

#TamilSchoolmychoice

அண்மையில் இதன் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டு, அது அனைவராலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. கீழ்காணும் இணைப்பில் இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: