கோலாலம்பூர்: அண்மைய வாரங்களில் நாடாளுமன்ற பொதுக் கணக்காய்வாளர் குழுவுக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களை தலைவராக நியமனம் செய்வதற்கு அரசாங்கம் கால தாமதம் ஏற்படுத்தி வந்ததும், அவ்வாறான மாற்றம் தேவையற்றது போன்ற கருத்துகளை வெளியிட்டதும், ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
ஆயினும், தற்போதைய தலைவரான ரோனால்டு கியாண்டிக்கு பதிலாக, பாரிட் சுலோங் நாடாளுமன்ற உருப்பினரான (தேசிய முன்னணி), நோராய்னி அகமட்டை நியமனம் செய்ய அரசாங்கம் முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்று வியாழக்கிழமை நடக்க இருக்கும் நாடாளுமன்ற அமர்வில் ஒன்பதாவது தீர்மானமாக இது குறித்து பிரதமர் மகாதீர் முகமட் பேசுவார் என நம்பப்படுகிறது.
கடந்த மார்ச் 15-ஆம் தேதி, கியாண்டிக்கு பதிலாக, நோராய்னியை அப்பதவிக்கு, தேசிய முன்னணி நாடாளுமன்ற முன்மொழிந்திருந்தது.
பிஏசி தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சியினை நியமிப்பதாக கடந்த 14-வது பொதுத் தேர்தல் அறிக்கையில் நம்பிக்கைக் கூட்டணி அரசு குறிப்பிட்டிருந்தது.