Home வணிகம்/தொழில் நுட்பம் பெரிய நிறுவனங்கள் உடனான போட்டியிலிருந்து பின்வாங்கிய மைக்ரோசோஃப்ட்!

பெரிய நிறுவனங்கள் உடனான போட்டியிலிருந்து பின்வாங்கிய மைக்ரோசோஃப்ட்!

958
0
SHARE
Ad

வாஷிங்டன்: கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதியிலிருந்து மைக்ரோசோஃப்ட் நிறுவனம் தனது இணையம் வழி புத்தக சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

பெரிய அளவில் இயங்கிக் கொண்டிருக்கும், அமேசான், ஆப்பிள் புக்ஸ் மற்றும் கூகுள் பிளே புக்ஸ் போன்ற முக்கிய தயாரிப்புகளுடன் போட்டியிடுவதில் விருப்பம் இல்லாதக் காரணத்தால் மைக்ரோசோஃப்ட், தனது இணைய புத்தக சேவையை மைக்ரோசோஃப்ட் இணைய விற்பனைத் தளத்திலிருந்து நீக்கியுள்ளது.

இனி வாடிக்கையாளர்கள் புத்தகங்களை வாடகைக்கோ, முன்பதிவு செய்து இணையத்தில் படிக்கவோ இயலாது என அது தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

புத்தகங்களை வாடகைக்கு எடுத்தவர்கள் அவற்றை வாடகை முடியும் தேதிக்குள் பயன்படுத்திக்கொள்ள முடியும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், புத்தகங்களை ஏற்கனவே இணையம் வழி வாங்கியவர்களின் பணம் மீட்டும் செலுத்தப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.