Home நாடு சாமிவேலு கையொப்பமிட்ட நினைவுப் பலகை குப்பையில் வீசப்பட்டது!

சாமிவேலு கையொப்பமிட்ட நினைவுப் பலகை குப்பையில் வீசப்பட்டது!

2333
0
SHARE
Ad

பாடாங் செராய்: ஹென்றேட்டா தமிழ் பள்ளியில், துன் சாமி வேலு கையொப்பமிட்ட நினைவுப் பலகை ஒன்று குப்பையில் வீசப்பட்ட விவகாரம் குறித்து, கெடாவைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு ஒன்று கடுமையாக விமர்சித்துள்ளது. மக்கள் ஓசையில் இந்த விவகாரம் குறித்து வெளியிடப்பட்டதாக ஸ்டார் நாளிதழ் தெரிவித்துள்ளது.

இம்மாதிரியான பொருட்கள் அகற்ற வேண்டி இருந்தால் அதற்கான முறை உள்ளது எனவும், அப்பள்ளியின் இந்த செயல் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அந்த அமைப்பு சாடி உள்ளது. ஆகவே, இப்பள்ளியின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

2012-ஆம் ஆண்டில் ஹென்ரேட்டா தோட்டத் தமிழ் பள்ளியை திறந்து வைத்த போது, இந்த நினைவுப் பலகை புகுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

Comments