Home இந்தியா இந்தியத் தேர்தல்: தமிழகத்தில் 127 கோடி ரூபாய் பறிமுதல்!

இந்தியத் தேர்தல்: தமிழகத்தில் 127 கோடி ரூபாய் பறிமுதல்!

1182
0
SHARE
Ad

சென்னை: இந்தியா முழுவதிலும் கூடிய விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில், இது நாள் வரையிலும், தமிழகத்தில் மட்டும் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 127 கோடிரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவை யாவும், கணக்கில் காட்டப்படாத பணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய தேர்தல்களைக் காட்டிலும் இம்முறை சம்பந்தப்பட்டிருக்கும் பணத்தின் தொகை மிக அதிகம் என தேர்தல் ஆணையம் கூறியது.

இதனால் மிக கடுமையான நடவடிக்கைகள், கண்காணிப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும், பண பலத்தை தடுக்க தீவிரமான, ஒளிவுமறைவற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டி வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. மதுபானங்கள், இலவச பரிசுப்பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவை வழங்குவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.