Home நாடு “பிகேஆர் கட்சியின் உண்மை போராட்டத்தை யாரும் மறந்து விடக்கூடாது”- வான் அசிசா

“பிகேஆர் கட்சியின் உண்மை போராட்டத்தை யாரும் மறந்து விடக்கூடாது”- வான் அசிசா

1303
0
SHARE
Ad

ரந்தாவ்:  பிகேஆர் கட்சியின் உறுப்பினர்கள், அக்கட்சியின் கடந்த காலப் போராட்டத்தினை அவ்வளவு எளிதில் மறந்து விடக்கூடாது என பிகேஆர் ஆலோசனை குழுவின் தலைவரும், துணைப் பிரதமருமான டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார். பிகேஆர் கட்சி முழுக்க முழுக்க மக்களின் போராட்டத்தில் எழுந்த கட்சியாகும் என அவர் தெரிவித்தார்.

கட்சியின் அனைத்து விதமான போராட்டங்களும் மக்களுக்காக தொடங்கப்பட்டது என்பதனை யாரும் மறந்து விடக் கூடாது என அவர் நினைவூட்டினார்.

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பேசிய டாக்டர் வான் அசிசா, தாம் கடந்து வந்த வேதனையான காலத்தையும், அவமானங்களையும் மக்களிடம் குறிப்பிட்டுக் கூறினார். வாழ்க்கையின் விளிம்பில், அனைவராலும் இகழ்ந்தும், குற்றவாளியாகவும் எங்கள் குடும்பத்தை மக்கள் சித்தரிக்கும் வண்ணம் எல்லா விதமான அரசியல் சூழ்ச்சிகளும் நடந்தன என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், பிகேஆர் கட்சியின் இந்த போராட்டம் அடுத்த தலைமுறைக்கும் தொடர வேண்டும் என்று அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

கடந்த 1998-ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி அன்வார் இம்ராகிம் அம்னோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த வெளியேற்றமே பிகேஆர் கட்சியின் எழுச்சியாக அமைந்தது.