Home வணிகம்/தொழில் நுட்பம் வாட்ஸ் அப்: ஒருவரின் அனுமதி இல்லாமல் இனி குழுவில் இணைக்க முடியாது!

வாட்ஸ் அப்: ஒருவரின் அனுமதி இல்லாமல் இனி குழுவில் இணைக்க முடியாது!

3304
0
SHARE
Ad

கலிபோர்னியா: கைபேசிகளில் அன்றாடம் நாம் எதிர் நோக்கும் பிரச்சனைகளில், வாட்ஸ் அப் செயலிலிருந்து இயங்கும் குழுக்களும் (குரூப்) அடங்கும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், பணியிட நண்பர்கள், உறவினர்கள் என இவர்களுக்கான குழுக்கள் அமைக்கப்பட்டு, அதனில் நம்மை இணைத்துக் கொள்வார்கள். அதனால், ஏற்படும் மன உலைச்சலுக்கு அளவே இல்லாமல் இருந்தது. 

இனி, வாட்ஸ் அப்பில் குழு அமைக்கும் போது, அவரவர் விருப்பத்திற்கு யாரை வேண்டுமானாலும் சேர்க்க முடியாத அளவிற்கு வாட்ஸ் அப் நிறுவனம் அச்செயலியில் சில அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த அமைப்பு வரும் வாரங்களில் அனைத்து பயனர்களும் நன்மை அடையும் அளவில் மேம்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இனி ஒருவருடைய அனுமதி இல்லாமல், அவரை எந்த ஒரு குழுக்களிலும் சேர்க்க முடியாத மேம்படுத்தப்பட்ட படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதற்கு முன்னர், வாட்ஸ் அப் குழுக்களில் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இனி அவ்வாறு செய்ய இயலாது.

#TamilSchoolmychoice

வாட்ஸ் அப் குழுவில் இருக்கும் குழுவினரோ, குழுவை நிர்வகிப்பவரோ உங்களை ஒரு குழுவில் சேர்க்க வேண்டுமென்றால், முதலில் உங்களிடம் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அனுமதி குறுஞ்செய்தி வந்த பிறகு, நீங்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே அக்குழுவில் உங்களை இணைக்க முடியும்